எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதைக் கொடுத்தாதோ, அதி இங்கேயே கொடுக்கப்பட்டது

Saturday, September 1, 2007

தாய்மொழி கல்வி

நமது சமுதாயத்தில் சமூக பொருளாதார முன்னேற்றம் அடைய கல்வி முக்கிய பங்காற்றுகிறது.குறைந்தபட்ச கல்வி அறிவை வைத்து வாழ்க்கை நடத்த மேட்டுகுடியை சார்ந்தவர்களால் மட்டுமெ முடியும்.நமது ஊரில் காலங்காலமாக சொகுசு வாழ்க்கை நடத்தும் சேட்டுகள் பெரிய அளவில் ஒன்றும் படிப்பதில்லை.
99 சதவிகித வேலைவாய்ப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெசும் அறிவு முக்கியமானதாகி விட்டது.தாய் மொழியில் படிக்கும் பிள்ளைகளுக்கு மிக குறைந்த வேலைவாய்ப்புகளெ உள்ளன.அதிகமான வேலைகள் கிடைக்கும் படிப்புகள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே உள்ளது.பள்ளிகல்வியை நீங்கள் தமிழில் படித்தால் பட்டப்படிப்பின் போது பின் தங்கவோ அல்லது தடுமாறவோ நேரும்.

Monday, August 13, 2007

Dream


Dream is not what you see in sleep, is the thing which does not let you sleep

Wednesday, July 18, 2007

அப்துல்கலாமை விமர்சிக்காதீர்கள்

தயவு செய்து சற்று நாகரீகமான முறையில் விமர்சனம் செய்யுங்கள்.அவர் இந்திய ஜனாதிபதியாகதான் இருந்தார் பிரதமராக அல்ல.மேலும் அவர் மிகச்சிறந்த விஞ்ஞானி.அவர் முதல் முறையாக இரண்டு பதவி திருத்த மசோதாவை திருப்பி அனுப்பினார்.கூடியவரை ரப்பர் ஸ்டாம்ப் ஆக இல்லாமல் இருந்தார்(அதனால்தான் இரண்டாவது முறை காங்க்ரஸ் அவரை கைகழுவியது).அவர் அரசியல்வாதியல்ல நாட்டில் நடைபெரும் விசயங்களுக்கு எல்லாம் கருத்து சொல்ல
அவரிடம் என்ன பவர் கொடுத்தோம் அவர் சாதிக்க. இதற்கு முன்னிருந்தவர்களை விட இவர் எவ்வளவோ தேவலை

Sunday, June 17, 2007

உத்திரப்பிரதெச சட்டமன்ற தேர்தல்

நடந்து முடிந்த உத்திரப்பிரதெச சட்டமன்ற தேர்தலில் மாயாவதி பெற்ற வெற்றியானது தலித்துகளின் நூறாண்டு அரசியலுக்கு கிடைத்த வெற்றியாகும்.இது மற்ற மாநிலங்களிலும் தலித் அரசியலுக்கு ஒரு டானிக்காக அமையும்.ஆனால் இந்திய தேசியம் தேர்தலின் போது கிட்டதட்ட செத்துவிட்டது என கூறும் அளவிற்கு சாதிய கூட்டு வெற்றி அடைந்திறுக்கிறது.இது ஏதொ மாயாவதியின் அனுகுமுறைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என ஊடகங்கள் செய்திகளையும் விமர்சனங்கலையும் வெளியிட்டு வருகின்றன ஆனால் கீழ் வரும் காரணங்களெ முக்கியமானவை1.மாநில தேர்தல்கள் கிட்டதட்ட பஞ்சாயத்து தேர்தல்களில் குறிப்பிட்ட சமூகங்களின் கூட்டு வெற்றியடைவது போல் மாறிவிட்டன.2.தேர்தல்கள் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்கும் களங்கள் என்ற நிலை மாறி சாதிகளின் போர்களங்களாக மாறியது3.இந்திய தேசியத்தின் வீழ்ச்சி.4.பிராமணர்கள் அரசியல்,நிர்வாகம் போன்றவற்றில் தாழ்த்தபட்ட்வர்களாக்கப்பட்டது.5.ஒவ்வொரு தெர்தலுக்குப்பின் வரும் அரசுகளின் மீதும் மக்கள் அடையும் ஏமாற்றம்.