எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதைக் கொடுத்தாதோ, அதி இங்கேயே கொடுக்கப்பட்டது

Saturday, September 1, 2007

தாய்மொழி கல்வி

நமது சமுதாயத்தில் சமூக பொருளாதார முன்னேற்றம் அடைய கல்வி முக்கிய பங்காற்றுகிறது.குறைந்தபட்ச கல்வி அறிவை வைத்து வாழ்க்கை நடத்த மேட்டுகுடியை சார்ந்தவர்களால் மட்டுமெ முடியும்.நமது ஊரில் காலங்காலமாக சொகுசு வாழ்க்கை நடத்தும் சேட்டுகள் பெரிய அளவில் ஒன்றும் படிப்பதில்லை.
99 சதவிகித வேலைவாய்ப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெசும் அறிவு முக்கியமானதாகி விட்டது.தாய் மொழியில் படிக்கும் பிள்ளைகளுக்கு மிக குறைந்த வேலைவாய்ப்புகளெ உள்ளன.அதிகமான வேலைகள் கிடைக்கும் படிப்புகள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே உள்ளது.பள்ளிகல்வியை நீங்கள் தமிழில் படித்தால் பட்டப்படிப்பின் போது பின் தங்கவோ அல்லது தடுமாறவோ நேரும்.